பளையில் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துடன் இ​ணைந்து கிளிநொச்சி உளநலச்சங்க நிறுவனத்தால் பால் நிலை சமத்துவம் தொடர்பான வீதி நாடக ஆற்றுகை நிகழ்வு இன்று(11.07) நடைபெற்றது.

கிளி/பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, கிளி/ வேம்பொடுகேணி சி.சி.த.க பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றன.

குறித்த வீதி நாடக ஆற்றுகை நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு, சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply