LPL – யாழ் அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(14.07) இரண்டாம் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

யாழ் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக அமைந்தது. பத்தும் நிஸ்ஸங்க 03(03) ஓட்டங்களுடனும், ரிலி ரொசவ் ஓட்டமின்றியும், குஷல் மென்டிஸ் 17(11) ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னரும் அடுத்ததடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. அவிஷ்க பெர்னாண்டோ 11(15) ஓட்டங்களைப் பெற்றார். சரித் அசலங்க 13(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பேபியன் அலன் முதற் பந்தில் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வா 06(08) ஓட்டங்களுடன் வெளியேறினார். ப்ரமோட் மதுஷான் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். வியாஸ்காந்த் 25(34) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். வியாஸ்காந்தின் துடுப்பாட்டம் மூலமே யாழ் அணி ஓரளவு மீண்டது. எஷான் மாலிங்க ஓட்டங்களை பெற்றார்.

யாழ் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்தது 109 ஓட்டங்களைப் பெற்றது. இந்த இலக்கை கொழும்பு அணி பெறுவது கடினமாக இருக்காது என நம்பப்படுகிறது.

பினுர பெர்னாண்டோ 4 ஓவர்களில் 24 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். ஷதாப் கான் 4 ஓவர்களில் 10 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றினார். திஸ்ஸர பெரேரா 2 ஓவர்களில் 15 ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை கைப்பற்றினார். மதீஷ பத்திரன 04 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

ஜப்னா கிங்ஸ் அணி தமது இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. யாழ் அணி முதலாவது தெரிவுகாண் போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில் இந்தப் போட்டி கொழும்பு அணிக்கு முக்கியமாக அமைகிறது.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் , ப்ரமோட் மதுஷான், விஜயகாந்த் வியாஸ்காந்த், தனஞ்சய டி சில்வா, எஷான் மாலிங்க

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் – மொஹமட் வசீம், திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, அஞ்சலோ பெரேரா, இசித்த விஜயசுந்தர

Social Share

Leave a Reply