இன்று அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைப்பு

இன்று (16.07) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது..

இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, 0 முதல் 30 வரையான அலகுகள் 08 ரூபாவிலிருந்து 06 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதுடன் 31 முதல் 60 வரையிலான அலகுகள் 20 ரூபாவிலிருந்து 09 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

0 முதல் 60 வரையிலான அலகுகள் 25 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதுடன் 61 முதல் 90 வரையிலான அலகுகள் 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

91 முதல் 120 வரையிலான அலகுகள் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதுடன் 121 முதல் 180 வரையிலான அலகுகள் 50 ரூபாவிலிருந்து 42 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

180 அலகுகள் 75 ரூபாவிலிருந்து 65 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் மூலம் மொத்த மின் கட்டணத்தை 10 வீதமாகக் குறைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழு கட்டணங்களை 22.5 வீதமாகக் குறைக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply