ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தான் அபார வெற்றி 

மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றியீட்டியது. 

தம்புள்ளையில் இன்று(21.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நேபாளம் சார்பில் கபித்த ஜோஷி(Kabita Joshi) ஆட்டமிழக்காமல் 31(23) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் சாடியா இக்பால்(Sadia Iqbal) 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

109 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் குல் பெரோசா(Gull Feroza) 57(35) ஓட்டங்களையும், முனீபா அலி(Muneeba Ali ) ஆட்டமிழக்காமல் 46(34) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, இந்த போட்டியில் குழு ‘ஏ’ உள்ள பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டி, 2 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் தரவரிசையின் 2ம் இடத்திற்கு முன்னேறியது. குழு ‘ஏ’ தரவரிசையில் இந்திய அணி பங்கேற்ற 2 போட்டிகளில் வெற்றியீட்டி முதலிடத்தில் உள்ளது. 

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகியாக பாகிஸ்தான் அணியின் குல் பெரோசா(Gull Feroza) தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply