கொரோனா மரணங்கள் 10,000

இலங்கையில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொட்டுள்ளது. இந்த வருடத்தில் குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இதில் அதிகம். இலங்கையில் மிகவும் கடுமையாக கொரோனா பரவல் அதிகரித்துவருகின்றது . இறப்புகள் சராசரியாக ஒரு நாளில் 200 ஆக காணப்படுகிறது. தனிமைப்படுத்தல் ஊரடங்கினை தொடர்ந்து நான்காயிரத்துக்கு அதிகமாக காணப்பட்ட தொற்று தற்போது 3500 அளவில் குறைவடைந்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருந்தால் கொரோனாவினை கட்டுப்படுத்த முடியும். இருப்பினும் பலர் அவதானமின்றி நடமாடுவதையும், தேவையற்று வீட்டை விட்டு வெளியேறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே ஒவ்வொரும் தான் தன்னை பாதுகாக்க வேண்டும் என நினைத்துக்கொண்டால் கொரோனா தொற்றினை குறைத்துக்கொள்ள முடியும். மரணத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும்.

கொரோனா மரணங்கள் 10,000

Social Share

Leave a Reply