தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சில மாகாண ஆளுநர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி கண்காணிப்பு பணிகளுக்காக முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலுக்கான வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர் அண்மையில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தன.

இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்புக்கமைய, கிழக்கு மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் அந்த நியமனங்களை இரத்து செய்தனர்.

எனினும் மேல் மற்றும் மத்திய மாகாண ஆளுநர்கள் இதுவரை அதற்கு எந்தவித உரிய பதிலையும் வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply