கொழும்பு இந்துக் கல்லூரி எதிர் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி போட்டி சமநிலையில் நிறைவு  

கொழும்பு, இந்துக் கல்லூரி மற்றும் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிகளுக்கு இடையிலான 15 வயதுக்குட்பட்ட Division 3 போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி சார்பில் எஸ்.என். குணவர்தன 27(27) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

கொழும்பு, இந்துக் கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில் வி. அபினேஷ் 5 விக்கெட்டுக்களையும், வி. கவிஷ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு, இந்துக் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்துக் கல்லூரி சார்பில் எஸ். சர்விஷ் 45(80) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி சார்பில் பந்துவீச்சில் உபுல் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

6 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் நிறைவடைந்தது. 

இதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்ததுடன், முதல் இன்னிங்ஸ் வெற்றியை டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி பெற்றுக் கொண்டது. 

கொழும்பு இந்துக் கல்லூரி எதிர் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி போட்டி சமநிலையில் நிறைவு  

Social Share

Leave a Reply