டெலிகொம் நிறுவன விற்பனைக்கு சஜித் எதிர்ப்பு 

டெலிகொம் நிறுவனம் தொடர்பில் முழுமையான உள்ளக கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(23.07) கோரிக்கையினை முன்வைத்தார். 

இலாபமீட்டும் நிறுவனமான டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில்  இன்று(23.07) அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்ட இடத்துக்குச் சென்று, அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

Social Share

Leave a Reply