1,700 ரூபா சம்பளம்: வர்த்தமானி இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 21ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார். 

தேயிலை மற்றும் இறப்பர் ஆகிய தொழில்துறைகளின் தொழிலாளர்களது குறைந்தபட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக, 2 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வௌியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply