ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக்கினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்கள் 12 பேர் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வீட்டில் கடந்த 22ம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத் தலைவர்கள் 12 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக, கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 75 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.