கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றுங்கள் – வவுனியா சுகாதார பணிப்பாளர்

வவுனியாவில் நாளை முதல் ஏற்றப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றிக்கொள்ளுமாறு வவுனியா பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 81,000 தடுப்பூசிகளை எமது திணைக்களத்தின் முயற்சியின் மூலம் பெற்று நாளை முதல் அவை மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இம்முறை அதிகமான ஊசிகள் வருகை தந்துள்ளதுடன்,கடந்த முறை ஒவ்வொரு தனி ஊசிகளாக வந்தவை, இம்முறை ஐந்து ஊசிகள் இணைந்தவையாக வந்துள்ளன.அவற்றை ஒவ்வொரு நிலையங்களுக்கும் தனியாக பிரித்து வழங்க வேண்டும். அதற்கான காலப்பகுதி தேவைப்படுவதனால் இன்றைய தினம் உடனடியாக ஊசிகளை ஏற்ற முடியவில்லை. அதேவேளை விமானப்படையினனர் உலக சுகாதார திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கும் ஊசி ஏற்றும் பட்டியலை பதிவு செய்து வருகின்றனர். அவர்களது வேலைகளை நாளைய தினமே வவுனியாவில் ஆரம்பிக்க முடியும். இந்த இரண்டு காரணங்களினாலேயே இன்றைய தினம்(06.09.2021) தடுப்பூசிகள்  ஏற்றப்படாமல், நாளைய தினம் ஏற்றப்படுவதாக வைத்திய கலாநிதி மகேந்திரன் வி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த தடுப்பூசிகளை ஏற்றும் திட்டத்துக்கு உறுதுணையாக இருந்து வரும்  மாவட்டத்தின் சகல  வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கும், அவர்களோடு கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சக ஊழியர்கள்,பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலகர்களுக்கும் இலங்கை செஞ்சிலுவை சங்க ஊழியர்களுக்கும், பொலிஸார், மற்றும் முப்படையினருக்கும்  இந்த திட்டத்தில் சுகாதர திணைக்களத்துக்கு உதவி வரும் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் வவுனியா பிராந்திய சுகாதர திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றுங்கள் - வவுனியா சுகாதார பணிப்பாளர்

Social Share

Leave a Reply