ஒலிம்பிக்: இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்கவுக்கு தோல்வி 

பிரான்ஸ், பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரேன் நெட்டசிங்க ஆடவருக்கான பூப்பந்தாட்ட ஒற்றையர் பிரிவில் தனது முதல் போட்டியில் நேற்று(28.07) பங்கேற்றிருந்தார். 

இந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 7ம் இடத்திலுள்ள மலேசியாவின் Zii Jia Lee யிடம் இலங்கையின் வீரேன் நெட்டசிங்க தோல்வியுற்றார். 

போட்டியின் முதல் இரண்டு செட்களையும் மலேசியாவின் Zii Jia Lee 21-14, 21-12 என்ற ரீதியில் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். 

வீரேன் நெட்டசிங்க பங்கேற்கும் ஆரம்பகட்ட போட்டிகளில் இரண்டாவதும் இறுதியுமான போட்டி நாளை(28.07) இலங்கை நேரப்படி 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

ஆடவருக்கான பூப்பந்தாட்ட ஒற்றையர் பிரிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்திலுள்ள வீரர்கள் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். 

இதேவேளை, நீச்சல் போட்டிகளில் மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவில் இலங்கையின் கங்கா செனவிரத்ன பங்கேற்கும் முதல் போட்டி இன்று(29.07) இலங்கை நேரப்படி பகல் 2.43 மணிக்கு நடைபெறவுள்ளது. 

கடந்த 28ம் திகதி ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டிகளில் தற்போதைய நிலவரப்படி, பதக்கப் பட்டியலில் ஜப்பான் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்ளடங்களாக 7 பதக்கங்களுடன் முதலிடத்திலுள்ளது. 

அவுஸ்ரேலியா 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

Social Share

Leave a Reply