முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உபாதை, அணிக்குள் புதிய வீரர்கள் 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சிகளில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது டில்ஷான் மதுசங்கவிற்கு உபாதை ஏற்பட்டுள்ளது. மதீஷ பத்திரனவுக்கு இந்தியா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

உபாதைக்கு உள்ளான இரண்டு வீரர்களுக்கு பதிலாக மொஹமட் ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகிய இருவரும் இலங்கை குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு மேலதிகமாக குஷல் ஜனித் பெரேரா, பிரமோத் மதுஷன் மற்றும் ஜெப்ரி ஆகியோர் காத்திருப்பு வீரர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று(02.08) பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை குழாம்: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, கமிந்து மென்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்க, டுனித் வெல்லாளஹே, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஷண, அகில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, மொஹமட் ஷிராஸ், எஷான் மலிங்கா

Social Share

Leave a Reply