நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் இன்று (02.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றும், நுவரெலியா நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து
காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.