மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(02.08) உத்தரவிட்டுள்ளது.
சமூக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காற்றாலை திட்டத்திற்கு அரசியல், வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் மன்னார் தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், காற்றலை நிர்மாணிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் புலம்பெயர் பறவைகளின் கேந்திர நிலையமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் தீவை தெரிவு செய்வதற்கு விஞ்ஞான ரீதியான அல்லது வேறு எவ்வித விசேட காரணங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.