நுவரெலியா – ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் இன்று (29/11) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை உணவை தயார் செய்துகொண்டிருக்கும் வேளையில், சிலிண்டர் வெடித்ததாகவும் இதனால் உணவு பொருட்கள் பாழடைந்ததுடன் உணவகத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
