எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து தமது நிலைப்பாட்டை சந்திரிக்கா வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கூறியுள்ளனர்.
இதற்கு கருத்து தெரிவித்த சந்திரிகா , தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படும் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியினர் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் எனவும் கட்சியின் ஆதரவாளர் எனவும் கூறியுள்ளார்.