
அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எக்சத் லங்கா மகா சபா கட்சி மற்றும் லங்கா மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு தேர்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட 6 அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.