இன்றும் தொடரவுள்ள கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம் 

இன்றும் தொடரவுள்ள கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம் 

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு வாரத்தை அறிவித்து நேற்று(12.08) முன்னெடுத்த பணிப்பபுறக்கணிப்பை இன்றும்(13.08) தொடர்வதற்கு தீர்மானித்துள்ளனர். 

நேற்று(12.08) முதல் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வரை எதிர்ப்பு வாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்திருந்தனர். 

கிராம உத்தியோகத்தர்களின் கோரிக்கை தொடர்பில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றைய தினமும் தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தாம் முன்வைத்த பரிந்துரைகள் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply