ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கட்சித் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன
அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம விகாரையில் இன்று (13.08) சந்தித்த அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.
இதன்போது புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.

ராஜித சேனாரத்ன ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply