
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் உடன்படிக்கையில் கையொப்பம் ஈடுபடுவதற்காக கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்காக இன்று(16.08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.