இலங்கையிலும் குரங்கம்மை தொடர்பில் கலந்துரையாடல்  

இலங்கையிலும் குரங்கம்மை தொடர்பில் கலந்துரையாடல்  

குரங்கம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குரங்கம்மை தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 14ம் திகதி உலகளாவிய ரீதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதுவரையில் மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க வலய நாடுகளில் பரவியிருந்த குரங்கம்மை தொற்று, தற்பொழுது ஆபிரிக்காவிற்கு வெளியில் சுவீடனில் நபரொருவருக்கு பதிவாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வைரஸ் தொற்று இலங்கையில் பரவாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை தொற்றினால் இதுவரையில் 500க்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Social Share

Leave a Reply