
சாதாரண (02 மற்றும் 03 ஆம் வகுப்பு) பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் புதிய ஸ்மார்ட் டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதனூடாக இன்றிலிருந்து இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக, நீங்கள் பிரயாணம் செய்யவுள்ள வகுப்பு,திகதி,நிலையம், மற்றும் பயணிகள் எண்ணிக்கை என்பவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
பின்பு அதற்குறிய கட்டணங்களை வங்கி அட்டைகள் ( visa, master) மூலம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதன் பின் ஞசு குறியீடு உள்ள ஸ்மார்ட் டிக்கெட் கிடைக்கப்பெறும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் டிக்கெட்களை பரிசோதனை செய்வதற்காக அதற்குரிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.