மன்னார் காற்றாலை திட்டத்தினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றீட்டு திட்டங்கள்

மன்னார் காற்றாலை திட்டத்தினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றீட்டு திட்டங்கள்

மன்னாரில் அதானி குழுமத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களினூடாக பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களுக்கும், வனஜீவரசிகளுக்கும் மாற்றீட்டு திட்டங்களை நடைமுறைப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களினூடாக அப்பகுதியிலுள்ள மக்களுக்கும், வனஜீவரசிகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று(21.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஒப்புக்கொண்டார்.  
 
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” மன்னாரில் அதானி குழுமத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களினூடாக அப்பகுதியில் பாதிப்புக்கள் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாற்றீட்டு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்விட சிக்கல்கள் ஏற்படுகின்றது. காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களினூடாக இருப்பிடங்களை இழக்கும் மக்களுக்கு, வேறு இடங்களில் காணிகளை வழங்கி அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்குள்ள வனஜீவரசிகளையும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply