பாரா ஒலிம்பிக்கில் 8 இலங்கையர்கள்  

பாரா ஒலிம்பிக்கில் 8 இலங்கையர்கள்  

2024ம் ஆண்டிற்கான பாரிஸ், பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு 8 இலங்கை வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.  

இலங்கை பாரா ஒலிம்பிக் குழாமுக்கு ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ள சமிதா துலான் தலைமை தாங்கவுள்ளதாகத் தேசிய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. இவர் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

நுவன் இந்திக (100m ஓட்டம்), பாலித பண்டார (குண்டு எறிதல்), அனில் ஜயலத் (100m ஓட்டம்), பிரதீப் சோமசிறி (1500m ஓட்டம்), சுரேஷ் தர்மசேன (டென்னிஸ்), நவீத் ரஷீத் (நீச்சல்) மற்றும் ஜனனி தனஞ்சன (நீளம் தாண்டுதல்) ஆகியோர் பாரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.  

இவர்கள் அனைவரும் எதிர்வரும் 25ம் திகதி போட்டிகளுக்காக பிரான்ஸ் புறப்படவுள்ளனர்

2024ம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் எதிர்வரும் 28ம் திகதி முதல் செப்டெம்பர் 08ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 189 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் 22 போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

Social Share

Leave a Reply