
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில்
812 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்பானவையாகும்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் PAFFREL இற்கு 228 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் 150 முறைப்பாடுகளையும் பெற்றுள்ளன.
அரசாங்கம் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கி வாக்குகளைப் பெறுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.