சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைளின் போதே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இலங்கை கடற்படையால் இழுவைப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 333 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுன் 45 இந்திய இழுவை படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply