முன்னாள் அமைச்சர் பௌசிக்கு கடூழியச் சிறைத் தண்டனை

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு கடூழியச் சிறைத் தண்டனை

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் அமைச்சர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று(27.08) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஏ.எச்.எம். பெளசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 400,000 ரூபா அபராதமும் விதித்துள்ளது.  

ஏ.எச்.எம். பெளசி 2010ம் ஆண்டு அமைச்சராக இருந்த போது, அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வெளிநாட்டினால் வழங்கப்பட்ட வாகனத்தை தன்னுடைய சொந்த தேவைக்காகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நெதர்லாந்து அரசாங்கத்தினால் இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த சொகுசு வாகனம் வழங்கப்பட்டதாகவும், அதனைப் பராமரிப்பதற்கு அமைச்சின் நிதியிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Social Share

Leave a Reply