
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டார்.
வாக்களிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன யூடியூப் வலைத்தளத்த்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில் ஹந்துன்நெத்தி
”அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்காக இலங்கை வர வேண்டாம் என புலம்பெயர் தொழிலாளர்களை சேனாரத்ன அச்சுறுத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பல மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அச்சுறுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையும்.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் iv பிரிவில் உள்ள 78(1) சரத்தை சேனாரத்ன தேவையற்ற செல்வாக்கு செலுத்தி மீறியுள்ளார்” என ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.