
சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (31.08) வெளியிட்டார்.
கொழும்பு ஶ்ரீஜயர்தனபுர கோட்டை மொனாக் இம்பீரியல் வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய மூலோபாய செயற்றிட்டம் எனும் தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனமானது மக்களின் ஆலோசனைகளோடு மக்களின் திருத்தத்திற்கேற்ப வௌியிடப்பட்டுள்ளது
இந்த தேர்தல் விஞ்ஞாபனம் 61 முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.