நல்லூர் தேர் திருவிழா நிறைவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
நல்லூர் தேர் திருவிழா நிறைவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருக்க நான் தீர்மானித்துள்ளேன்.
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆலயத்தின் கலாசார முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன்.
இவ்வாறான புனித காலங்களில் இந்த மரபுகளை பேணி பாதுகாப்பது முக்கியம் என நான் நம்புகிறேன்” என்றார்.