வடக்கு கிழக்கில் பொலிஸ் அல்லது காணி அதிகாரங்களுக்கு இடமில்லை – நாமல்

வடக்கு கிழக்கில் பொலிஸ் அல்லது காணி அதிகாரங்களுக்கு இடமில்லை - நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது.
ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கும்.

குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் செயற்படாது.
எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply