ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊடக வழிகாட்டல்களுக்கமைய செயற்படாத ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவகாசம் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (12.09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் செயற்பட்டால், ஆணைக்குழுவினால் நடத்தப்படும் ஊடகவியலாளர் மாநாடுகளில் இருந்து நீக்கல், தகவல் வழங்காமை, தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமை போன்ற பல சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடக முறைகேடுகள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ஐந்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.