சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எதுவித மாற்றமும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு மாவை சேனாதிராசா மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு மத்தியில்
அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
உரிய நடைமுறைகளை பின்பற்றி எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எதிர்கால வேலைகள் குறித்து சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானால் அவரை கையாள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டோம். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவற்றை எதிர்கொள்ள பல விடயங்கள் உள்ளன. குறிப்பாக மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.