ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் IMF மீளாய்வு

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் IMF மீளாய்வு

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இலங்கையின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதை சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மீதான இலங்கையின் மூன்றாவது மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் ஜூலி கோசாக் தௌிவுப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மீளாய்வு நேரம் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IMF இன் நிலைப்பாட்டில் இருந்து, நாம் பார்ப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியே ஆகும். ஆனால் நாடு அதன் மோசமான நெருக்கடிகளிலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு இந்த வளர்ச்சியை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என கோசாக் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply