இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாளைய இறுதி நாளில் இரு அணிகளுக்காமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை முதல் தெரிவு செய்தது.
முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிஸ்ஸங்க 73(148) ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ண 42(90) ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் வீராசாமி பெர்மவுல் 5 விக்கெட்களையும், ஜோமேல் வாரிக்கன் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. இதில் கிராய்க் ப்ராத்வயிட் 72(185) ஓட்டங்களையும், ஜெர்மெய்ன் ப்ளாக்கவூட் 44(99) ஓட்டங்களையும், கையில் மயேர்ஸ் ஆட்டமிழக்காமல் 36(64) ஓட்டங்களையும், பொன்னர் 35(95) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்களையும், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ்சில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்சய டீ சில்வா 150 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 66(154) ஓட்டங்களையும் பெற்றனர். லசித் எம்புல்தெனிய, தனஞ்சய டீ சில்வா ஆகியோரது ஒன்பதாவது இணைப்பாட்டமாக 107 ஓட்டங்களை பெற்றுள்ளனர். இந்த இணைப்பாடம் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பெரிதும் கைகொடுத்தது.
பந்துவீச்சில் வீராசாமி பெர்மவுல் 3 விக்கெட்களையும், ரொஸ்டன் சேஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இலங்கை அணி 279 ஓட்டங்களினால் முன்னிலையில் காணப்படுகிறது. இதனால் இலங்கை அணிக்கான வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.
