புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – வெளியான பல உண்மைகள்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு - வெளியான பல உண்மைகள்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன் தெரிவித்தார்.

இதன்படி, அனுராதபுரம் இரத்மலை திஸ்ஸ கல்லூரியின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான தலைவர் உட்பட மூவரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மண்டபத் தலைவர் உள்ளிட்ட மூவரிடமும் மாகாணக் கல்வித் திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தது.

பரீட்சை நிலையத்திலிருந்த உதவி அதிபர் ஒருவரினால் ஆசிரியர் குழுவிற்கு வினாத்தாள் பகிரப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,குறித்த பரீட்சை மண்டபத்தில் பணிபுரிந்த பரீட்சை நிலையத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் ஆசிரியர் ஒருவரின்
சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply