2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதற்கட்ட வாக்கு முடிவுகளுக்கமைய 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.
அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை,
ஹம்பத்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 5,634,915 வாக்குகளை பெற்று 42.31 வீதத்தால் அவர் முன்னிலை வகிக்கின்றார்.
சஜித் பிரேமதாச நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76 வீதத்தால் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 17.27 வீதத்தால் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 வாக்குகளுடனும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரன் 226,342 வாக்களுடனும் 05 ஆவது இடத்திலும் உள்ளனர்.
122,396 வாக்குகளை பெற்று திலித் ஜயவீர ஆறாவது இடத்திலும் கே.கே பியதாச 47,528 வாக்குகளை பெற்று 07 ஆவது இடத்திலும் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட்டு வருகின்றது.