
புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது ரவி செனவிரத்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.