புதிய பிரதமர் மற்றும் அமைச்சருக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து

புதிய பிரதமர் மற்றும் அமைச்சருக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் குரல் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு ஆகிய இரண்டினையும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கலை சீர்திருத்துவதற்கும், இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பிற்காக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply