புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு - மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காகக் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளை இன்று(26.09) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் இதுவரை 2 சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களுக்கு அமையக் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply