ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்திய மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய பல பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பல முக்கிய பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய மக்கள் சக்தியின்
கம்பஹா மாவட்டத்தின் தவிசாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply