பதில் பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம்?

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம்?

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல் வௌியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் இந்த துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அதிகாரியாவார்.

இதன்படி,பிரியந்த வீரசூரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி வரை பல்வேறு பதவிகளில் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply