எரிவாயு விநியோகத்தினை இலங்கையின் இரண்டு எரிவாயு நிறுவனங்களும் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட தேவைகளுக்காக இரண்டு நிறுவனங்களும் எரிவாயுவினை விநியோகிக்க அனுமதி வழங்கியுளளதாக பாவனையாளர்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
எரிவாயு உடல் தகனசாலைகளுக்கும், தொழில்சார் உற்பத்தி தேவைகளுக்கும் எரிவாயுவினை விநியோகம் செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு தேவைகளுக்கான எரிவாயு விநோயோகம் செய்யப்படாத நிலையே காணப்படுகிறது.
