நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இந்தியா அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி சாதனையை பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் 10 விக்கெட்களையும் கைப்பற்றிய மூன்றாவது பந்துவீச்சாளராகவும், நியூசிலாந்தின் முதலாவது பந்துவீச்சாளராகவும் அஜாஸ் பட்டேல் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஜிம் லேக்கர் 1956 ஆம் ஆண்டு முதற் தடவையாக 10 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார் . அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு இந்தியா அணியின் வீரர் அணில் கும்ப்ளே 10 விக்கெட்களை கைப்பற்றினார் .
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணி துடுப்பாடிய வேளையிலேயே அஜாஸ் பட்டேல் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அஜாஸ் பட்டேல் இந்தியா மும்பாயில் பிறந்து, நியூசிலாந்தில் வசித்து வருபவர். தனது சொந்த ஊரில், தான் பிறந்த நாட்டுக்கு எதிராக சாதனை படைத்துள்ளமை சுட்டிகாட்டத் தக்கது. 1998 ஆம் ஆண்டு இந்தியா மஹாராஸ்திராவில் பிறந்தவர் அஜாஸ் பட்டேல்.
119 ஓட்டங்களை வழங்கி 10 விக்கெட்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட மூன்றாவது சிறந்த பந்துவீச்சு பெறுதியாக இந்த பெறுதி பதிவு செய்யப்பட்டுள்ளது .
