பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ?

பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிடுவாரா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் வெளியாகும் வரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காட்சி காத்துக் கொண்டிருப்பதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அடுத்த சில நாட்களுக்குள் மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானம் மேற்கொள்வார் என நேற்று(07.10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானம் வெளியாகிய பின்னர் கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply