வேட்புமனுத் தாக்கல் – ஆட்சேபனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்

வேட்புமனுத் தாக்கல் - ஆட்சேபனைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவுறுத்தலுக்கமைய
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான தினால் பிலிப், நளின் திசாநாயக்க மற்றும் எஸ்.டி.ஜயநாத ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

குழுவின் அறிக்கையை உடனடியாக கட்சியின் வேட்புமனு குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply