
திறைசேரி முறிகளை இன்று புதன்கிழமை (09.10.2024) ஏலத்தில் விடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, 185,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விலைமனுக்களை இன்று முற்பகல் 11 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.
திறைசேரி முறிகளுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11.10.2024) செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.