
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
17 பேர் கொண்ட இலங்கை குழாமுக்குப் பிரதமர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான ஹரிணி அமரசூர்யவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
பானுக ராஜபக்ஷ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கை குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் நிறைவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் கிண்ணத்தை வென்ற சென் லுசியா கிங்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் பானுக ராஜபக்ஷ விளையாடியிருந்தார்.
இறுதியாக இலங்கை பங்கேற்ற இந்தியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்த தசுன் ஷானக, டில்ஷான் மதுஷங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இம்முறை குழாமில் இடம்பெறவில்லை.
3 போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டி20 தொடர் தம்புள்ளையில் எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை குழாம்: சரித அசலங்க(அணித் தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மென்டிஸ், தினேஷ் சந்திமல், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, ஜெப்ரி, நுவன் துஷார, டுனித் வெல்லாலகே, சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ