இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், சாட்சிகளைத் திரட்டுகின்ற நெறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாது என இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இருப்பினும், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரின் போது குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனூடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பொறிமுறையின் அதிகாரங்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.